உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வு

Published On 2022-06-17 08:55 GMT   |   Update On 2022-06-17 08:55 GMT
மத்திய அரசின் தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வு நாளை நடக்கிறது.

சேலம்:

இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. (உபசரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை) படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு -2022 அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

சேலம், நாமக்கல்

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4/2/2022 தொடங்கி, 3/5/2022 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் திரளானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு கணினி வழியாக நாளை (18-ந்தேதி) நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, ேகாவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் சேலம், நாமக்கல் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கோவையில் உள்ள மையத்தில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற உள்ளது.

அனுமதி அட்டை

தேர்வுக்கான அனுமதி அட்டைகள் என்.டி.ஏ. இணையதளத்தில் வழங்கப்–பட்டுள்ளன. விண்ணப்ப–தாரர்கள் அனுமதி அட்டை–களை பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வேண்டும். மேலும் அதை சரிபார்த்து கொள்ளுமாறும், தேர்வு குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக படிக்குமாறும் என்.டி.ஏ. அறிவுறுத்தி உள்ளது.

அனுமதி அட்டை தபால் மூலம் அனுப்பப்படாது. விண்ணப்பதாரர் அனுமதி கார்டை சிதைக்கவோ அல்லது அதில் உள்ள எந்தப் பதிவையும் மாற்றவோ கூடாது. அவற்றின் நகலை எதிர்கால குறிப்புக்காக நல்ல நிலையில் வைத்திருக்குமாறு என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News