உள்ளூர் செய்திகள்

நூற்பாலை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-09-28 09:20 GMT   |   Update On 2023-09-28 09:20 GMT
  • இந்திய நூற்பாலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்.

சூலூர்,

சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 16-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ஜி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சண்முகம், கோபால்சாமி வேலுச்சாமி பாலகிருஷ்ணன், பிரபு முன்னிலை வகித்தனர்.செயலாளர் கே.ஆர்.சண்முகசுந்தரம் அனை வரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக பழைய வட்டி வீதமான 7.5 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும்.

குறுகிய கால கடனான நிலவை தொகையை மீட்டெ டுத்து கொண்டு அக்கடனை ஏற்கனவே வழங்கியது போல் முழுவதுமாக மீண்டும் புதிய கடனாக வழங்க வேண்டும். இக்கட னுக்கு விடுமுறை காலமாக ஆறு மாதமும் அக்கடனை திருப்பி செலுத்த ஏழு வருடங்களும் மிகக் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

நூற்பாலைத் தொழிலின் மந்தநிலையை கருத்தில் கொண்டு தற்போதுள்ள காலக்கடனை மறு சீரமைத்து 2 ஆண்டு கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

நூல் மற்றும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அந்நிய நூல் மற்றும் துணிவகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதியாவதை கண்காணித்து தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எம்.டி கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

நூற்பாலை தொழிலின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உபயோ கப்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப எம்டி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நூற்பாலைத் தொழில் 24 மணி நேரமும் மின்சாரம் நகரப்படும் தொழில் என்பதால் மாநில அரசு பசுமை எரிசக்தியை ஊக்குவித்து அதற்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன. இதில் துணை செயலாளர்கள் சென்னியப்பன் பார்த்திபன் சவுந்தர், துணைத் தலைவர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News