உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மழை வேண்டி நடை பயணம்

Published On 2023-08-13 14:23 IST   |   Update On 2023-08-13 14:23:00 IST
  • சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
  • இதில் மழை வர வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேண்டி கொண்டனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் அப்பகுதியில் போதிய மழை பெய்ய வேண்டி, திருத்தல அதிபர் வெனீஷ் குமார் தலைமையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்,மழை பொழிய வேண்டுகிறோம் தாயே "நிலத்தடி நீர் பெருக வேண்டும் தாயே " என்ற முழக்கத்துடன் ஆலயத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயத்துக்கு நடைபயணம் சென்றனர்.

இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அதிசய மணல் மாதா ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில் மழை வர வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேண்டி கொண்டனர். இதில் தென் மண்டல இளைஞர் இயக்குனர் சேசு மற்றும் பெரியநாயகம், எமலி உள்ளிட்ட திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News