உள்ளூர் செய்திகள்

சுத்தமல்லி போலீஸ் சரகத்தில் சாதி அடையாளங்கள் அழிக்கும் பணியை எஸ்.பி. சிலம்பரசன் பார்வையிட்ட காட்சி.

நெல்லை மாவட்டத்தில் சாதிய அடையாளங்கள் அழிப்பு- போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு

Published On 2023-10-21 09:20 GMT   |   Update On 2023-10-21 09:20 GMT
  • போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வர்ணம் பூசி அழித்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மானூர் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குபட்டி, சீதக்குறிச்சி, இரண்டும் சொல்லான், கட்டாரங் குளம், எட்டான்குளம், தெற்கு வாகைகுளம், களக்குடி, திருமலாபுரம், மடத்தூர், ஆகிய பகுதியில் 112 மின்கம்பங்கள், 3 நீர்தேக்க தொட்டிகள், 5 பாலங்கள், ஒரு மரம், 2 பஸ் நிறுத்தங்கள், ஒரு கிணறு, ஒரு குடி தண்ணீர் பை ஆகிய இடங்களிலும், சுத்தமல்லி போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட சுத்தமல்லி, சங்கன்திரடு, நரசிங்க நல்லூர், பட்டன் கல்லூர் ஆகிய பகுதியில் 30 மின்கம்பங்களிலும்,

பத்தமடை போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பத்தமடை பிள்ளையார் கோவில் தெரு, மங்கை யர்க்கரசி தெரு பகுதியில் 33 மின்கம்பங்களிலும், மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலைய சரகத்திற்கு ட்பட்ட முனைஞ்சிப்பட்டி பகுதியில் 5 மின்கம்பங்களிலும் என ஒரே நாளில் 95 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வர்ணம் பூசி அழித்தனர். நெல்லை மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழித்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags:    

Similar News