உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு
- சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
- சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் போலீசார் புனுகாண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சபரி(வயது 35), அப்பு (38), மதி (31), சக்தி (37), கோவிந்தராஜ், புகழ், சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்களில் அப்பு,மதி,சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.