உள்ளூர் செய்திகள்

அண்ணன்-தம்பியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Published On 2022-11-12 15:25 IST   |   Update On 2022-11-12 15:25:00 IST
  • மூன்று பேரும் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
  • சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளா ங்கண்ணி செபஸ்தியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30).

அதே பகுதியை சேர்ந்தவர் ரெனால்ட். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் ரெனால்ட்டுக்கு ரூ.40,000 பணம் கொடுத்துள்ளார்.

கொடுக்க பணத்தை ராஜ்குமார் திரும்ப கேட்டார்.

இதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டிற்கு வந்த ரெனால்ட் அவரது சகோதரர் ராகுல், நண்பர் திராவிட தமிழன் ஆகிய மூன்று பேரும் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

அப்போது அதை தடுப்பதற்காக ராஜ்குமாரின் தம்பி கருணாகரன் வந்துள்ளார்.

அவரையும் மூன்று பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த ராஜ்குமார் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராஜ்குமார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News