உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மோடி உருவபொம்மை எரித்த காங்கிரசார் 12 பேர் மீது வழக்கு

Published On 2023-03-24 09:06 GMT   |   Update On 2023-03-24 09:06 GMT
  • பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
  • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கடலூர், மார்ச்.24-

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கடலூர் காமராஜர் சிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       

 இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி கோஷம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி மோடி உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புது நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உருவ பொம்மையை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதில் ஓ.பி.சி.அணி ராமராஜ், மீனவரணி கடல் கார்த்திகேயன், ஆட்டோ வேலு, விக்கி, ஆறுமுகம் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News