உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி மலைப்பாதையில் ராட்சத எந்திரங்களுடன் அணிவகுக்கும் சரக்கு லாரிகள்

Published On 2023-07-13 09:17 GMT   |   Update On 2023-07-13 09:17 GMT
  • சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
  • போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பெரிய தொழிற்சாலைகளுக்கான ராட்சத எந்திரங்கள் சரக்கு லாரிகள் மூலம் எடுத்து வரப்படுகின்றன.

அந்த வாகனங்களின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். அவை சாலையின் நடுவே செல்லும் மின் கம்பிகள் மீது பட்டால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.

எனவே அந்த நேரத்தில் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பணியாட்கள் ஈடுபடுவது உண்டு. ஆனால் வனப்பகுதிகளில் சரக்கு லாரி வரும்போது வழியில் உள்ள மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை சேதப்படுத்துகிறது. அவற்றை லாரி டிரைவர்கள் சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் ராட்சத எந்திரங்களுடன் சரக்கு லாரிகள் பெரும்பாலும் மாலைநேரத்தில் வந்து செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடி யாக தலையிட்டு இதற்கு நிரந்தரதீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News