உள்ளூர் செய்திகள்

சேலம் கருப்பூர் அருகே கார் - லாரி மோதல்;வாலிபர் உள்பட 5 பேர் படுகாயம்

Published On 2023-05-05 15:13 IST   |   Update On 2023-05-05 15:13:00 IST
  • சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.
  • கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது.

கருப்பூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்டரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 26 ). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் மற்றும் அதே பகுதி சேர்ந்த முத்து மகன் பெரிய நாயகம், (வயது 24) உள்பட மொத்தம் 5 பேர் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து கோவை செல்வ தற்காக சொகுசு காரில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

கார் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது. மேலும் வயிற்றில் இருந்து குடல் வெளிேய வந்தது. மற்றொரு வாலிபர் பெரியநாயகத்திற்கு தலை, கால், அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்றவர்களும் படுகாயம் அடைந்தனர்.

கவலைக்கிடம்

அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போலீசார் சேர்ந்து 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்டோபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து நடந்த பகுதி சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் பஸ் பயணிகள், அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓமலூர் தீய ணைப்பு நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு) குப்புசாமி, மற்றும் போலீசார் போக்கு வரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News