உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி போட்டியை தொழிலதிபர் முருகேச பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

ஓட்டப்பிடாரம் அருகே மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - தொழிலதிபர் முருகேச பாண்டியன் தொடங்கி வைத்தார்

Published On 2023-04-27 08:40 GMT   |   Update On 2023-04-27 08:40 GMT
  • மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்-புளியம்பட்டி சாலையில் நடந்தது.
  • ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்-புளியம்பட்டி சாலையில் நடந்தது.

போட்டிக்கு அயிர வன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரிய மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை அயிரவன் பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் கமலா வண்டி 2-வது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டனர். சிறிய மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை வி.எம்.சத்திரம் பாலன் வண்டி முதலிடத்தையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி 2-வது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து குதிரை வண்டி போட்டியில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அவலாபேரி பாண்டி தேவர் குதிரை வண்டி முதலிடத்தையும், வள்ளியூர் ஆனந்த தேவர் வண்டி 2-வது இடத்தையும், நெல்லை டவுன் கோகுலம் குதிரை வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

போட்டியை காண தூத்துக்குடி, நெல்லை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News