உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம் நடந்தபோது எடுத்த படம்.

விளாத்திகுளம் அருகே கோவில் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-07-11 08:56 GMT   |   Update On 2023-07-11 08:56 GMT
  • போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன், காந்தாரி அம்மன், முனியசாமி கோவில் ஆனிக்கொடை விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி. ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடங்களை பிடித்து வெற்றி பெற்றன.

பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மாட்டு வண்டி போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News