உள்ளூர் செய்திகள்

விழாவில் கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்புகளை அமைச்சர்கள் சக்கரபாணி, காந்தி ஆகியோர் வழங்கினர். அருகில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் ஆகியோர் உள்ளனர்.

ரூ.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்- அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்

Published On 2022-08-15 09:54 GMT   |   Update On 2022-08-15 09:54 GMT
  • ரூ.47.90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
  • அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் ஐகுந்தம், ஊத்தங்கரை ஒன்றியம் செங்கழநீர்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.

இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஐகுந்தம் கூட் ரோடு முதல் சென்றாநாயக்கனூர் வரை ரூ.47.90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று, கால்நடை மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தும், தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியும் வைத்தனர். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ., செங்குட்டுவன், முன்னாள் எம்பி.க்கள் சுகவன், வெற்றிச்செல்வன், நாகோஜனஅள்ளி பேரூ ராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அதி காரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News