தருமபுரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் மாநாடு
- கிளைசெயலாளர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
- மாநிலசெயலாளர் ராஜசேகர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.
தருமபுரி,
பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் அமைப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட மாநாடு தருமபுரி பாரதிபுரம் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபாலன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பருதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கிளை தலைவர் கந்தசாமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.கிளைசெயலாளர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மாநிலசெயலாளர் ராஜசேகர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் சையது இத்ரீஸ், மாநில சிறப்பு அழைப்பாளர் நாராயணசாமி, மாநில உதவி செயலாளர் பாபு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அகில இந்திய பொருளாளர் உமாராணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிரிதரன், அஞ்சல்துறை ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.