உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.
திருவோணம்:
ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு பைபாஸ் ரோட்டில் கடந்த புதிதாக சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இக்கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஒரத்தநாடு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
கோவில் உண்டியலில் இருந்து திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.