உள்ளூர் செய்திகள்

சிறைக்கைதிகள் பயன்பாட்டுக்காக குவியும் புத்தகங்கள்

Published On 2023-02-08 09:29 GMT   |   Update On 2023-02-08 09:29 GMT
  • கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.
  • மக்கள் புத்தகங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் சிறைகளில் கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.

இங்கு சுழற்சி முறையில் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு கைதிகள் படிப்பதற்காக வைக்கப்படுகின்றன. கோவை மத்திய சிறை வளாகத்திலும் நூலகம் உள்ளது. இந்தநிலையில் சிறைத்துறை டி.ஜி.ப.அமரேஷ் பூஜாரியின் உத்தரவின் பேரில் கைதிகளின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் தானம் பெறும் கூண்டுக்குள் வானம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூரில் சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வதற்கான அரங்கு அமைக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களால் தானமாக வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பல்க் வளாகத்தில் புத்தக தானம் பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சிறைவாசிகளின் நலனுக்காக புத்தக தானம் வழங்க விரும்பும் பொது மக்கள் புத்த கங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது . 

Tags:    

Similar News