உள்ளூர் செய்திகள்

உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் மாணவிகளுக்கு புத்தகப்பை வழங்கிய காட்சி.

உடன்குடி பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை

Published On 2022-11-19 14:33 IST   |   Update On 2022-11-19 14:33:00 IST
  • பல்வேறு போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
  • சேகரகுருவும் பள்ளி தாளாளருமான ஜான்சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

உடன்குடி:

உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் வேதக்கோட்டைவிளை, நேசபுரம், கொட்டங்காடு, ராமசாமிபுரம், ஞானியார்குடியிருப்பு, கந்தபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நவீன புத்தகப்பைகள், கல்வி உபகரணங்களை வழங்கினார். தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் சேது மனோகரராயன், அதிகாரிகள் செந்தில்குமார், ஜான்சார்லஸ், வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, ஆதியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேகரகுருவும் பள்ளி தாளாளருமான ஜான்சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தலைமையாசிரியை கிரேனா புக், ஆதியாக்குறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் பவுல், சபை ஊழியர்கள் ஜெனோ, ஜெஅபி எள்ளுவிளை தி.மு.க. கிளை செயலர் மோகன் மற்றும் வான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News