உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பா.ம.க.கொடியேற்று விழா

Published On 2022-07-10 13:58 IST   |   Update On 2022-07-10 13:58:00 IST
  • மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
  • 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில், ஓசூரில் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

ஓசூர் ஜுஜுவாடி, பேகேபள்ளி, எழில் நகர் பாலாஜி நகர், சின்ன எலசகிரி,ஆர்.ஆர்.நகர், அண்ணாமலைநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த கொடியேற்று விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும் இதில், பா.ம.க. வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தகவல்தொடர்பு மாநில தலைவர் கனல் கதிரவன், வெங்கடேஷ், கஜேந்திரன்,விசுவநாதன், குணசேகரன், சக்திவேல், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News