உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

Published On 2022-07-16 09:35 GMT   |   Update On 2022-07-16 09:35 GMT
  • காமராஜர் பிறந்தநாைளயொட்டி பனங்காட்டு மக்கள் கழகத்தினர் 101 போ் ரத்ததானம் செய்தனர்.
  • தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டிலுள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

தூத்துக்குடி:

காமராஜர் பிறந்தநாைளயொட்டி பனங்காட்டு மக்கள் கழகத்தினர் 101 போ் ரத்ததானம் செய்தனர்.

மாநில வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி.சிலுவை நாடார் தலைமையில் தூத்துக்குடி பெரிய பள்ளி வாசல் பகுதியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது


முகாமில், தூத்துக்குடி மாவட்ட பனங்காட்டு மக்கள் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் சுமார் 101 போ் ரத்ததானம் செய்தனர். மேலும், ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவ, மாணவியர்களுக்கு எழுதுபொருட்களும், மதிய உணவும் வழங்கப்பட்டது.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர்கள் சிவனேசன், செல்வகுமார், தூத்துக்குடி ஒன்றிய இளைஞரணி செல்வக்குமார், நிர்வாகிகள் பிரபு, சுரேஷ்குமார், விஜய், திலக் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டிலுள்ள காமராஜர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

இதில், மாநில வர்த்தகஅணி துணை செயலாளர் ரவிசேகர், கலை இலக்கிய அணி அந்தோணிபிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், துணைச்செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பிரதிநிதி பெரியசாமி, இளைஞரணி டேனியல்ராஜ், மாணவரணி அகஸ்டின், தொண்டரணி முத்துசெல்வம், வர்த்தக அணி முத்துக்குமார், விவசாய அணி சரவணன், தொழிலாளர் அணி ஜெகன், மீனவரணி விக்ரம், மாநகரச்செயலாளர் உதயசூரியன், அவைத்தலைவர் மதியழகன், பொருளாளர் சந்தனகுமார், ஒன்றிய செயலாளர் பாரத், ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News