உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 

திட்டக்குடி நகராட்சியில் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

Published On 2022-11-04 07:19 GMT   |   Update On 2022-11-04 07:19 GMT
  • 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
  • வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு தர்மக்குடிகாடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் இருக்கின்ற அனைத்து கழிவுநீர்களையும் தர்மகுடிகாடு பகுதி வழியாக கொண்டு சென்று வெள்ளாற்றில் கலக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்ததாக கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலந்து சென்றனர். திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காடு அருகே திட்டக்குடி - விருத்தாசலம் மாநில சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் திட்டக்குடி நகராட்சியிடம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி தர கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று திட்டக்குடி நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர துணைத் தலைவர் பரமகுரு மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழை நீரை வடிக்கால் வழியாக தர்மக்குடிகாட்டில் இருந்து வெள்ளாருக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு உட்பட்ட அப்பகுதி மக்கள் 6-வது வார்டு உறுப்பினர் நவீன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி காவியா, இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட க்காரர்கள் தற்போது தற்காலிகமாக இந்த வழியாக பள்ளம் தோண்டப்பட்டால் விரைவில் திட்டக்குடி நகராட்சி சாக்கடை நீர் அனைத்தும் இவ் வழியாக தான் அருகிலுள்ள வெள்ளா ற்றிக்கு செல்லும் எனவே இவ்வழியாக வடிகால் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சார்பில் தற்போது பருவ மழை தொடங்கிய தால் சாலை ஓரம் உள்ள மழை நீரை மட்டும் செல்வதற்கு தற்காலிகமாக பள்ளம் தோண்டி வெள்ளா ற்றில் மழை நீரை விடுவதாக தெரிவித்தனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவி த்ததால் இதுகுறித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக த்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என டிஎஸ்பி காவியா தெரிவி த்தார். இதையடுத்து போராட்ட க்காரர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News