உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகளை செய்யாத புதுச்சேரி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம்

Published On 2022-11-10 14:39 IST   |   Update On 2022-11-10 14:39:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
  • சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.

சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News