பொன்னேரி பகுதிகளில் பா.ஜனதா தெருமுனை பிரச்சார கூட்டம்
- பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
- மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
பொன்னேரி:
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பிரச்சார பிரிவு சார்பில் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் சோமு ராஜசேகர், மாவட்ட நிர்வாகிகள் பரந்தாமன், திவாகர், விஜயா, வெங்கட், பொன் பிரகாஷ், பிரகாஷ் சர்மா, வினோத் ரெட்டி, ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர் முத்து, பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் பஜார் வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் சோமு. ராஜ சேகரன் சிறப்புரையாற்றினார். நகர தலைவர் சிவராஜ், பொதுச்செயலாளர் மணிகண்டன், சதீஷ், பொருளாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் வினோத் ரெட்டி, வர்ணன், துணைத் தலைவர் ஆன்மீக பிரிவு தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் தினகரன், மாவட்ட துணை தலைவர் திவாகர், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பிஜேபி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரியில் சோமு ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொதுச் செயலாளர்கள் ராஜு சத்தியமூர்த்தி, சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஆதிகேசவன், சண்முகம், நாகமணி, ராமர்,மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.