உள்ளூர் செய்திகள்

பால் விலை உயர்வை கண்டித்து பெரியபாளையத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-15 13:10 IST   |   Update On 2022-11-15 13:10:00 IST
  • எல்லாபுரம் ஒன்றிய தலைவர் எம்.சேகர் தலைமை தாங்கினார்.
  • தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

பெரியபாளையம்:

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்கட்டணம், பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் ஒன்றிய தலைவர் எம்.சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வேல்மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில், நாகராஜ் நன்றி கூறினார்.

Similar News