உள்ளூர் செய்திகள்

கோவையில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-23 15:46 IST   |   Update On 2022-07-23 15:46:00 IST
  • வரலாறு காணாத மின் உயர்வினை தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது.
  • மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

கோவை:

தமிழகத்தில் மின்சாரம் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பா ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று. ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தங்கினார்.

இதில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: வரலாறு காணாத மின் உயர்வினை தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இந்த மின்கட்டண உயர்வினால் தொழிற்சாலை செலவு அதிகரிக்க போகிறது.

தற்ேபாதைய குடியரசு தலைவருக்கு நடந்த பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு முக்கியமான நிகழ்வு இருப்பதால் கோவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. டெல்லியில் இருந்தாலும் அவர் எண்ணங்கள் தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இருக்கின்றது.

எந்த விலை உயர்வு ஏற்பட்டாலும் அதற்கு பா.ஜ.க காரணம் என்கின்றனர். எனவே மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News