மத்தூரில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றியத் தலைவர் சிவன் தலைமையில் நடைபெற்றது.
மத்தூரில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
- பா .ஜ .க.செயற்குழு கூட்டம் ஒன்றியத் தலைவர் சிவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- கிராமந்தோறும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் மேற்கு மண்டல
பா .ஜ .க.செயற்குழு கூட்டம் ஒன்றியத் தலைவர் சிவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளரும் மாவட்ட செயலாளருமான சரவணன், பார்வையாளர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கிராமந்தோறும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவுத் பிரிவு தலைவர் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் காலயரசன், மாவட்ட ராணுவ பிரிவு செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் தலைவர் வெங்கடேசன், மண்டல பொது செயலாளர்களான இராமச்சந்திரன்,துரை, துணை தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், அணி பிரிவு தலைவர்கள், கிளை தலைவர்கள் ஒன்றிய அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.