உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே மாதத்தில் சைக்கிள் மொபட் திருட்டு

Published On 2022-06-27 15:21 IST   |   Update On 2022-06-27 15:21:00 IST
  • 32 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கோவையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம கும்பல் ஊடுருவி உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 33 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் 32 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

கோவை பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம், காட்டூர், ரேஸ்ேகார்ஸ், சாய்பாபா காலனி, செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போய்யுள்ளது.

இதையடுத்து போலீசார் திருட்டு போனதாக தெரிவித்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கோவையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம கும்பல் ஊடுருவி உள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் கடந்த சில நாட்கள் முன்பு 33 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 32 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் ஒரே மாதத்தில் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக 65 புகார்கள் பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News