உள்ளூர் செய்திகள்

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில் பூசலார் நாயன்மார் குருபூஜை விழா

Published On 2023-11-10 10:17 GMT   |   Update On 2023-11-10 10:17 GMT
  • 14-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் 8 மணிக்கு தேவாரம் திருவாசகம் இன்னிசை பாராயணம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
  • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அம்பத்தூர் இசக்கி நாட்டியாலயா மற்றும் ஆவடி தாண்டவா நாட்டியப்பள்ளி மாணவ- மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருநின்றவூரில் ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோவிலில் பூசலார் நாயன்மார் குருபூஜை பெரு விழா வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு 14-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் 8 மணிக்கு தேவாரம் திருவாசகம் இன்னிசை பாராயணம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. காலை 11 மணிக்கு பூசலார் நாயனாருக்கு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அம்பத்தூர் இசக்கி நாட்டியாலயா மற்றும் ஆவடி தாண்டவா நாட்டியப்பள்ளி மாணவ- மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பூசலார் நாயனார் திருக்கோவிலில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பூசலார் நாயனார் சிவபெருமானோடு ஐக்கி யமாகும் திருக்காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.எஸ். ஜெகன் சோமசுந்தரம் செட்டியார், பூசலார் குரு பூஜை பரம்பரை உபயதாரர்கள் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ஆர்.ராமசுப்பிரமணியன், மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் மேலாளர் ஜி. தண்ணீர்மலை செட்டியார், சி. கோட்டீஸ்வரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News