உள்ளூர் செய்திகள்

 களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தார்சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

தார்சாலை அமைக்க ரூ.33.5 லட்சம் மதிப்பில் பூமி பூஜை

Published On 2023-08-08 15:11 IST   |   Update On 2023-08-08 15:11:00 IST
  • ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
  • களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

மத்தூர், ஆக.8-

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி அங்கம்பட்டி முதல் மேக்கலாம்பட்டி வரை 1350 மீட்டர் தூரம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, களர்பதி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, அ.தி.மு.க ஒன்றிய

அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்களான எல்.சி. முருகன், வேடி, பாலு, அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, மனோஜ் (எ) அண்ணாமலை, ஊராட்சி செயலர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர். 

Tags:    

Similar News