கும்பாபிேஷகம் நடந்தது
பீமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
- சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சியில் உள்ள அபிராமி அம்பாள் உடனுறை பீமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 27-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.பின்னர், சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கோவில் ராஜகோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இருக்கை, பெருந்தலைக்குடி கிராமமக்கள், விழா குழுவினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.