உள்ளூர் செய்திகள்

பண்ருட்டிதிருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்.

பண்ருட்டிதிருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்

Published On 2023-08-14 07:09 GMT   |   Update On 2023-08-14 07:09 GMT
  • காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
  • மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி,திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு பவித்ர உற்சவம் கடந்த 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் 2-ம் நாள் உற்சவமும் நேற்று 3-ம் நாள் உற்சவமும் நடந்தது. இதனை முன்னிட்டு காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News