உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே அரசு பள்ளியில் பேட்டரி திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2022-09-16 13:11 IST   |   Update On 2022-09-16 13:11:00 IST
  • இந்த பள்ளியில் கம்ப்யூட்டர்களுக்கு தனியறை உள்ளது.
  • தலைமை ஆசிரியர் நாகமணி பள்ளி–யை பூட்டிவிட்டு சென்றார்.

விழுப்புரம் 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கிளிய–னூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிளியனூர் மற்றும் கிளியனூரை சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கம்ப்யூட்டர்களுக்கு தனியறை உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்தவுடன் மாலையில் தலைமை ஆசிரியர் நாகமணி பள்ளியை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு சமயம் அரசு பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் பள்ளியின் பின்பக்கம் வழியாக பள்ளிக்குள் நுழைந்து கம்ப்யூட்டர் இருக்கும் அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த பேட்டரிகளை திருடி சென்றுவிட்டனர்.இன்று காலை வழக்கம்போல் பள்ளியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் அறை உடைக்கப்பட்டு அதிலிருந்து பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நாக மணி கிளியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்கு பதிவு செய்து அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News