உள்ளூர் செய்திகள்

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரத்ததான முகாம்

Published On 2022-11-19 15:25 IST   |   Update On 2022-11-19 15:25:00 IST
  • கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
  • மொத்தம் 25 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

பர்கூர்,

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 69- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி, பயிற்சியாளர்கள், கூட்டுறவாளர்கள் மற்றும் ரத்த தானம் செய்வோரை வரவேற்றார்.

இதில் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர வங்கி துணைப் பதிவாளர் தமிழரசு ஆகியோர் பங்கேற்று, கூட்டுறவு வார விழா குறித்து சிறப்புரையாற்றினர். அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ரத்த தானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

இதில் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலை 5 பெண் பயிற்சியாளர்கள், 19 ஆண் பயிற்சியாளர்கள், ஒரு பயிற்சி அலுவலர் என மொத்தம் 25 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

Tags:    

Similar News