உள்ளூர் செய்திகள்

மேலப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை போலீசார்.

பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை - மேலப்பாளையத்தில் துணை கமிஷனர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு

Published On 2022-09-28 09:22 GMT   |   Update On 2022-09-28 09:22 GMT
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கவச உடை அணிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நெல்லை:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

100 போலீசார்

நெல்லை மாவட்டத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை மேலப்பாளையத்தில் மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கவச உடை அணிந்த அதிரடிப் படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோல் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் ரோந்து சென்றும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்பட்டது குறித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News