கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் பால்குட ஊர்வலம்
- 8-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது,
- மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது,
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஸ்ரீ காலபைரவர் கோவிலில் 15-ம் ஆண்டு பைரவரஅஷ்டமி பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது,
நாள்தோறும் கோவில் கிராம தெய்வங்கள் வழிப்பாடு, வினாயகர் பெருமாள் நகர்வலம், சுமங்கலி பூஜை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைப்பெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது,
இதன் முன்னதாக கந்திகுப்பம் ஸ்ரீ விநாயகர் கோவில் முன்பாக ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிகளின் தலைமையில் நடைப்பெற்ற இந்த பால்குட ஊர்வலத்தினை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து யானை, ஒட்டகம், குதிரை, எருது உள்ளிட்ட வாகனங்களுடன் பல்வேறு இசை மேளங்களுடன் நடைப்பெற்ற இந்த பால்குடம் ஊர்வலமானது கந்திகுப்பம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றது. இந்த ஊர்வலம், காமராஜர் நகர், செங்கொடி நகர் வழியாக சென்று ஸ்ரீ காலப்பைரவர் ஆலயத்தினை சென்றடைந்தது.
உலக மக்கள் யாவரும் நலம்முடன் வாழவேண்டி நடத்தப்பட்ட இந்த பால்குட ஊர்வலத்தின்போது ஊர்வலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராமன ஆண்களும், பெண்களும் பால்குடங்களுடன் கலந்துக்கொண்டு ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.
இந்த விழாவின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்டத்துணைத்தலைவர் சேகர், முன்னால் சேர்மன் ஆறுமுகம், மற்றும் மூத்த வழக்கறிஞர் அசோகன், கோவிந்தசாமி, நகர தலைவர் யுவராஜ், உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.