உள்ளூர் செய்திகள்

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் பாலாலய பூஜை

Published On 2022-07-05 05:19 GMT   |   Update On 2022-07-05 05:19 GMT
  • முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது.
  • இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ள நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி:

பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முருகன் கோவிலின் 8 உபகோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெறுகிறது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவில், பழனி கிரிவீதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இடும்பன் மலைக்கோவில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோவில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் ஆகிய 5 கோவில்களில் இன்று விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல் நடக்கிறது.

பின்னர் 7 மணிக்கு நவகோள் வழிபாடு, முதற்கால யாகம் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு யாகம் நிறைவு பெற்று பேரொளி வழிபாடு நடக்கிறது. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகம் தொடங்கி 6.15 மணிக்கு நிறைவு பெறுகிறது. 6.30 மணிக்கு நவகோள் வழிபாடு, திருக்குடம் புறப்பாடு நடைபெற்று புனிதநீர் தெளித்தல் நடக்கிறது. தொடர்ந்து திருப்பணி தொடங்குகிறது.

இதேபோல் சண்முகநதி தூர்நாச்சிஅம்மன், பழனி வையாபுரிகரை பாதிரி விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், நவகோள் வழிபாடு நடக்கிறது. 6.30 மணிக்கு பின் திருக்குடம் புறப்பாடு, புனிதநீர் தெளித்தல், பேரொளி வழிபாடு நடைபெற்று 7.15 மணிக்கு திருப்பணி தொடங்குகிறது.

பழனி வேணுகோபால பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, நவகோள் வழிபாடு, காப்புக்கட்டுதல், யாகம் நடைபெறுகிறது. பின்னர் 6.45 மணிக்கு திருக்குடம் புறப்பாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News