உள்ளூர் செய்திகள்

தாட்கோ மூலம் கடன் வழங்க மறுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி போராட்ட அறிவிப்பு

Published On 2022-08-05 07:39 GMT   |   Update On 2022-08-05 07:39 GMT
  • தாட்கோ மூலம் கடன் வழங்க மறுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளனர்.
  • இதனால் வரை அதற்கு தாட்கோ மூலம் வங்கி கடன் வழங்கவில்லை.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தனி தொகுதி அமைப்பு செயலாளராக பாலு இருந்து வருகிறார். இவர் 2021-2022- க்கான ஆடு வளர்ப்பு சிறு தொழில் கடனை கடந்த 24.11.2020 அன்று தாட்கோ மூலம் 8 பேருக்கு கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். அப்பொழுது கடந்தாரர்களுக்கு விண்ணப்பம் தேர்வுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளனர். இது சம்பந்தமாக கடந்த 24.11. 2020 ஒவ்வொரு கடன் விண்ணப்பத்தாரர்களுக்கும் கடந்த 31/7/2021 அன்று நேர்காணல் நடை பெற்றுது. கடன் தாரர்களுக்கு 15 தினத்திற்குள் குமராட்சி தனியார் வங்கி மேலாளர் கடன் வழங்குமாறு உத்தரவு விண்ணப்பம் வந்துள்ளது. ஆனால் வங்கி மேலாளர் இந்த 8 பேரையும் அழைத்து நேர்காணல் வைத்து க தாட்கோ மாணியத்துடன் கடன் தருகிறேன் என்று ஒப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் இதனால் வரை அதற்கு தாட்கோ மூலம் வங்கி கடன் வழங்கவில்லை. மீண்டும் வங்கிக்கு சென்று கடந்த 18.02.2022 அன்று வங்கி மேலாளிடம் இது சம்பந்தமாக பேசியிருக்கிறார்கள். ஆனால் வங்கி மேலாளர் அலட்சியமாக இருந்து உள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாட்கோ அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கிக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பு செயலாளர் பாலு தெரிவித்து உள்ளார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவி வித்யா ராஜசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News