உள்ளூர் செய்திகள்

 உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.

கோவில்பட்டியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-12 09:03 GMT   |   Update On 2022-10-12 09:03 GMT
  • தூத்துக்குடி மாவட்ட மனநல திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகம் சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • மாணவர்கள் கலந்து கொண்டு, மனநலம் காப்போம், மனநலம் பேணுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட மனநல திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகம் சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் தலைமை தாங்கினார்.

உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் பூவேஸ்வரி, நகராட்சி ஆணையர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன், ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனத் தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மனநல மருத்துவர் நிரஞ்சனா, மனநலம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் அதனை தவிர்ப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். பேரணியை நகர்மன்றத் தலைவர் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி புதுரோடு, ரயில் நிலையம் வழியாக மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்கு வந்து நிறைவடைந்தது.

பேரணியில் எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவர்- மாணவிகள் கலந்து கொண்டு, மனநலம் காப்போம், மனநலம் பேணுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பின்னர் மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், சுரேஷ், கனகராஜ், கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஜெயா, வெற்றிச்செல்வி, ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பக மேற்பார்வையாளர்கள் மாடசாமி, ராம்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News