அரசு பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி
- மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
ஓசூர்,
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொறுப்பு) கோபாலப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில், பள்ளி மாணவர்கள் மற்றும் என்.சி.சி, சாரணர் படை, என்.எஸ்.எஸ், என்.ஜி.சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆய்வாளர் சுரேஷ்பாபு, தலைமையாசிரியர் முனிராஜ், ஆசிரியர்கள் ரமேஷ் ராஜு, சுதாகர் மற்றும் பசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது, பள்ளி வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. முடிவில், என்.எஸ்.எஸ். அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.