உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

ஆலங்குளம் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Published On 2022-11-18 09:02 GMT   |   Update On 2022-11-18 09:02 GMT
  • ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
  • கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜான் ரவி, கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, பழனி சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளநிலை உதவியாளர் முகைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் செல்வின்துரை, ஆனஷ்ட் ராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News