பொன்னேரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த விழிப்புணர்வு
- ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை அரசு மருத்துவர் அனுரத்னா துவக்கி வைத்தார்.
- பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை அரசு மருத்துவர் அனுரத்னா துவக்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், ஊனம் ஒரு தடையல்ல ஊன்றுகோலாய் நாம் இருந்தால் இணைவோம் முயல்வோம், ஊனம் ஒரு அடையாளம் அல்ல, சமத்துவம் சகோதரத்துவம் என பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பொன்னேரி பஜாரில் ஊர்வலமாக சென்றனர்.
இதில் மேற்பார்வையாளர் ராஜேஷ் கண்ணா, ஆசிரியர் இளவரசன், ரகுநாதன் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் ஜமுனா, செபஸ்டின், சுகந்தி ரம்யா, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்,டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். மாணவர்கள் சமூகத்துடன் மாற்றுத்திறனாளி மாணவர்களை சமத்துவத்துடன் சகோதரத்துவமுடன் நடத்தப்பட்டது.