உள்ளூர் செய்திகள்

மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு

Published On 2023-02-17 09:55 GMT   |   Update On 2023-02-17 09:55 GMT
  • கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
  • மண்ணின் நலம் அறிவோம் மற்றும் சத்து குறைபாட்டைத் தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

கிருஷ்ணகிரி,

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண்மை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மணவர்கள் 11 பேர் கொண்ட குழுவாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் நடுப்பையூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மண் பரிசோதனை குறித்து செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வுப் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேரப் அலி முன்னிலையில், ஊர்வலம் தொடங்கப்பட்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பேரணியின் போது மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை ஏந்திக் கொண்டு, உயிருக்கு பிளட் டெஸ்ட், மண்ணுக்கு மண் டெஸ்ட், மண் பரிசோதனை செய்து, மண்ணின் நலம் அறிவோம் மற்றும் சத்து குறைபாட்டைத் தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

Tags:    

Similar News