உள்ளூர் செய்திகள்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-01-21 14:46 IST   |   Update On 2023-01-21 14:46:00 IST
  • சட்ட ரீதியான உதவிகள் பெற்று பயனடையலாம்.
  • கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

நீலகிரி மாவட்ட சமூக நல துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் குன்னூர் தனியார் கல்லூரியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்படி மாவட்ட அலுவலர் பிரவீனா தேவி அறிவுறுத்தலின்படி, சமூக நலத்துறை அலுவலர் ஹெலன் கிறிஸ்டீனாள் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது புதுமை பெண் திட்டம், சமூக நலத்துறையின் திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், சைபர் கிரைம் பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, போதைப் பொருளின் தீமைகள், குழந்தைகளுக்கான இலவச உதவி எண் 1098, பெண்களுக்கான இலவச உதவி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருந்தால் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அணுகி உளவியல் ஆலோசனை, காவல் துறை ரீதியான உதவிகள், மருத்துவ ரீதியான உதவிகள், சட்ட ரீதியான உதவிகள் பெற்று பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதில் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை ஏட்டு ராஜம்மாள் மற்றும் குன்னூர் இலவச சட்ட பணிகள் குழு பணியாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News