வெற்றி பெற்ற மாணவிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசுகள் வழங்கிய காட்சி. அருகில் தனுஸ்குமார் எம்.பி., பழனிநாடார் எம்.எல்.ஏ. உள்ளனர்.
தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
- தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
தென்காசி:
தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.