உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த ஏ.வி.பி. பள்ளி மாணவிக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டிய காட்சி

பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த ஏ.வி.பி. பள்ளி மாணவிக்கு பாராட்டு

Published On 2022-06-25 05:56 GMT   |   Update On 2022-06-25 05:56 GMT
  • சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளை அடையாளப்படுத்தி காட்டினார்.
  • மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார்.

திருப்பூர் :

திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் மாணவி சன்விகா சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளையும், அவற்றின் பெயர்களையும் 1 நிமிடம் 45 நொடிகளில் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தி காட்டினார்.

மேலும் அன்று நடைபெற்ற மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார். பல்வேறு சாதனைகள் புரிந்த சன்விகாவிற்கு"டேலண்ட் ஐகான்'' விருதினை கிரேட் சக்சஸ் அகாடமி வழங்கி கவுரவித்தது. மேலும் கராத்தே போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

மிகச்சிறிய வயதிலேயே பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவி சன்விகாவை பள்ளி தாளாளர்கார்த்திகேயன் ,முதல்வர் ,ஒருங்கிணைப்பாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News