உள்ளூர் செய்திகள்

கோவை மதுக்கரையில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம்

Published On 2022-07-07 15:35 IST   |   Update On 2022-07-07 15:35:00 IST
  • குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
  • கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.

செட்டிபாளையம் :

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். கோவை மதுக்கரையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஏ.சி.சி. டிரஸ்ட் சார்பில் மதுக்கரை அடுத்த குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதியில், மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை பார்வையிட்ட அமைச்சர், வரும் முன் காப்போம், மக்களை தேடி மருத்துவத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை இயக்குநர் அருணா, பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஏசிசி நிர்வாக இயக்குநர் எஸ்ஆர்.டிரிக்கி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.இதில் அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்க ளை வழங்குகிறார். இதில் டீன் ரவீந்திரன், கண்கா ணிப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர்

பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News