உள்ளூர் செய்திகள்

கோவையில் மயங்கி விழுந்த ஆட்டோ டிரைவர் பரிதாப சாவு

Published On 2023-07-03 09:25 GMT   |   Update On 2023-07-03 09:25 GMT
  • முபாரக் ஆட்டோவை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
  • முபாரக்கை பரிசோதனை செய்த போது அவர் இறந்தது தெரிய வந்தது.

கோவை,

கோவை தெற்கு உக்கடம் பிலால் நகரை சேர்ந்தவர் முபாரக் (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் உக்கடத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்றார்.

பின்னர் பயணிகளை அங்கு இறக்கி விட்டு சர்பவாசலில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். முபாரக் ஆட்டோவை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சு ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று முபாரக்கை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த முபாரக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News