உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆடி அமாவாசை: அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்

Published On 2023-07-14 07:01 GMT   |   Update On 2023-07-14 07:01 GMT
  • வருகிற 17-ந் தேதி மற்றும் ஆகஸ்ட்டு 16-ந் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 17-ந் தேதி மற்றும் ஆகஸ்ட்டு 16-ந் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை முன்னிட்டு முக்கிய கோவில்களான அழகர்கோவில், அணைப்பட்டி, அனுமார்கோவில், ஆத்தூர் சடையாண்டி கோவில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில், தேனி உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில்,

ராஜபாளையம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் குச்சனூர் ஆகிய கோவில்களுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, தேனி, சின்னமனூர், கம்பம், தேவாரம்,

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கோவில் தலங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News