- ரூ. 4 ஆயிரத்து 200 பணத்தை பறித்து விட்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூற கூடாது என கூறி கொலை மிரட்டல்.
- 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
வல்லம்:
தஞ்சை ரெட்டிபாளையம் மேட்டு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35). இவர் தஞ்சையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவதன்று சதீஷ்குமார் வேலை முடித்து விட்டு அவருடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது ரெட்டிபாளையம் காந்தி பாலம் அருகே அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அங்கு கிடந்த தென்னை மட்டையால் சரமாரியாக தாக்கி ரூ. 4 ஆயிரத்து 200 பணத்தை பறித்து விட்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூற கூடாது என கூறி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இது குறித்து சதீஷ்குமார் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.