கோப்பு படம்.
நத்தம் அருகே சண்டையை விலக்கச் சென்ற தந்தை-மகன் மீது தாக்குதல்
- கோழி அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து பள்ளம் பறித்ததாக கூறப்படுகிறது.
- அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சண்முகம் ஆகியோர் சண்டையை விலக்க சென்றுள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(45). இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இவரது கோழி அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து பள்ளம் பறித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் 3 பேருடன் சென்று பாண்டியை தாக்கி உள்ளார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சண்முகம் ஆகியோர் சண்டையை விலக்க சென்றுள்ளனர்.
இதில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டதில் இருவரும் காயமடைந்து நத்தம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக ்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாண்டி நத்தம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து ஆத்திபட்டி யை சேர்ந்த ஜெயராமன் (55), விஜயகுமார் (19), ரஞ்சித் (26), அஜீத் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.