உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் சாவி போலீசார் தீவிர விசாரணை
- பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன.
- போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி அருகே அதே வங்கியில் பணம் எடுக்கவும் பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு ஏ.டி.எம்.எந்திரத்தில் சாவி இருந்ததை கண்டு ஏ.டி.எம்.- க்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு வந்து சாவியை போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். கொள்ளையர்கள் யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தில் சாவியை வைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா, அல்லது ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை வைத்துவிட்டு சாவியை அங்கேயே ஊழியர்கள் விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.