உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரையில்டீ கடைக்காரரின் பைக் திருடியவர் கைது
- பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை
- திருட்டு நடந்த டீ கடையின் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது29). இவர் நான்கு ரோட்டில் டீ கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் கடையின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ரகுமான் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு நடந்த டீ கடையின் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனம் திருடியது திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் அருகே திருபனங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (48) என்பவர் என தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.